திருவனந்தபுரம்
சாவைத்தரும் தாவர சாடிகள்: கெண்டித்தாவரங்களின் இரையீர்ப்பு யுக்தியில் கரியமிலவாயுவின் பங்களிப்பை கண்டறிந்துள்ளது ஆய்வு!

தாவரக்குடும்பங்கள் தங்களுக்குள் பல்லாயிரக்கணக்கான விந்தைகளை புதைத்து வைத்திருப்பதை நாம் பலநேரங்களில் உணருவதில்லை. இதற்கு புலாலுண்ணித்தாவரங்கள் ஒரு வியக்கத்தக்க எடுத்துக்காட்டு. இவ்வகைத்தாவரங்கள், பிற உயிரிகளை -  பெரும்பாலும் பூச்சிகளை உண்ணக்கூடியவையாகும். உலகத்திலுள்ள நான்கு லட்ச தாவர வகைகளில், சுமார் ஆயிரம் வகைகள், புலாலுண்ணும் தாவரங்களாக உள்ளன. இவை ஊட்டச்சத்து குறைந்த மண்பரப்புகளில் வாழுவதால் தங்களுக்கு தேவையான சத்துக்களை பூச்சிகள் மற்றும் பிற முதுகெலும்பற்ற சிற்றுயிரிகளிடமிருந்து பெறுகின்றன.  

நெபாந்தஸ் (Nepenthes) எனப்படுவது 160 சிற்றினங்களைக்கொண்ட புலாலுண்ணி தாவரவகைகளில் ஒன்றாகும். தமிழில் நெபாந்தஸ் பேரினம் “கெண்டி” என்று அழைக்கப்படுகிறது. கெண்டி என்பது குழந்தைகள் பால் அல்லது தண்ணீர் அருந்தப் பயன்படுத்தப்பட்ட ஒரு பாத்திரம் ஆகும். இந்த தாவரங்களின் இரை பிடிக்கும் கோப்பைகள் (pitcher) குறிப்பதற்காக இவை கெண்டி தாவரங்கள் என பெயர் பெற்றுள்ளது.  மேலும், இவ்வினத்தை சாடித்தாவரம் (pitcher plant) அல்லது ‘குரங்குக்கோப்பைகள்’ (monkey cups) எனவும் அழைப்பர்.  இந்த இனத்தை சேர்ந்த தாவரங்கள் மடகாஸ்கர், தென்கிழக்கு ஆசியா, வடக்கு ஆஸ்திரேலியா-நியூகினியா பகுதிகள், பார்னியோ, சுமத்திரா மற்றும் பிலிப்பைன்சு ஆகிய நாடுகளில் இவை காணப்படுகின்றன. இத்தாவரங்கள் நுண்ணிய முனைகளையுடைய வாள் போன்ற இலைகளையும், படர்ந்து வளர ஏதுவாக நூல்போன்ற தளிரிழைகளையும் கொண்டவையாகும். ஊட்டச்சத்துக் குறைப்பாட்டை எதிர்கொள்ளும் பரிணாம யுக்தியாக, இவற்றின் தளிரிழைகள் கோப்பை வடிவான ‘இலைக்குழிகள்’ அல்லது ‘சாடிகளாக’ உருவெடுத்துள்ளன.

“புலாலுண்ணித்தாவரங்கள் பூமியில் தனித்துவமான உயிர்வகைகளாகும். அவை பூச்சிகளை மற்றும் சிற்றுயிரிகளை கவரும்படி பரிணாமரீதியாக தங்களை மாற்றியமைத்துக்கொண்டுள்ளன” என்கிறார் திருவனந்தபுரத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு வெப்ப மண்டலம் தாவரவியில் தோட்டம் மற்றும் ஆய்வு நிறுவனத்தை (Jawaharlal Nehru Tropical Botanic Garden and Research Institute) சார்ந்த ஆராய்ச்சியாளராரான முனைவர் சாபுல் பேபி அவர்கள்.

கேரள அரசு மற்றும் கேரள மாநில அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் மன்றத்தின் (Kerala State Council for Science Technology and Environment) நிதிநல்கையுடன், ஜர்னல் ஆஃப் சைண்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் (Journal Scientific Reports) எனும் ஆய்விதழில் பிரதியான ஆய்வில் இவரும், இவரின் சகாக்களும்; கெண்டித்தாவரங்கள், கரியமிலவாயுடு நிரப்பிய குழிகளை பயன்படுத்தி பூச்சிகளை ஈர்கின்றன என கண்டறிந்துள்ளனர்.

நெபாந்தஸ்ஸின் சாடியானது முதிர்ச்சியடைவதற்கு முன்வரை மூடிஇருந்து, முதிர்ச்சியடந்தப்பின் உள்ளே பகுதியளவு அமிலத்தன்மையுடைய நொதிகளை நிரப்பிக்கொள்ளும். சாடிகளில் ஒப்ர்குலம் (operculum) எனும் பகுதி மூடிப்போல் செயல்பட்டு சாடியின் வளர்ச்சிக்காலத்தில் முழுதாக மூடியும் முதிர்ச்சியடைந்தப்பின் இரையை பிடிக்கும்வகையில் திறந்து காணப்படும். இவை மலர்தேன், வாசனை, நிறம், ஒளிக்கோலங்கள் (fluorescence)  போன்ற குறிப்புக்களைப் பயன்படுத்தி தங்கள் இரைகளை ஈர்க்கும். இந்த அழிவார்ந்த ஈர்ப்புக்குறியீடுகளால் ஏமாறும் பூச்சிகளை சாடியில் சுரக்கும் அமிலநொதிகள் ஜீரனித்து பின்னர் அந்த ஐயுறுவற்ற இரைகளை இத்தாவரங்கள் கபலீகரம் செய்து விழுங்கிவிடுகின்றன. 

இந்த ஆய்வு இத்தாவரங்களின் இரையீர்த்தல் குறிப்புகளில் ஒரு புது பரிமாணத்தை சேர்த்திருக்கின்றது.

“திறக்கப்படாத நெபாந்தஸ் சாடிகளில் அதிக அளவு கரியமிலவாயு (Carbon dioxide) இருப்பதையும் அவை இரைய ஈர்க்கும் வகையில் ஒரு சீரான அளவில் திறக்கப்பட்ட சாடிகளிலிருந்து வெளியேற்றப்படுவதையும் இந்த ஆய்வு கண்டறிந்தது. நெபாந்தாஸ் இனத்தில் இது ஒரு புது வகை இரைப்பிடிக்கும் முறையாகும்” என கூறுகிறார் முனைவர். பேபி.

இந்த ஆய்வாளர்கள் களத்தில் சில தொடக்கநிலை சோதனைகள் மூலம் வாயு நிரம்பிய சாடித்தாவரங்களை கண்டறிந்து, பின்னர் அவற்றில் கரியமிலவாயுவின் பங்கு என்னவென்று கூராய்வு செய்துள்ளனர் “நெபாந்தஸ் கெண்டித்தாவரங்கள் “ஹாலோ லீவ்ஸ்” (Hollow leaves) எனும் உட்குழிவான இலைகள் எனவும் அறிவியல் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. ஆனால் உன்மையில் அவைகள் முழுமையான உட்குழிகளாக இருப்பதில்லை. நெபாந்தஸின் ஒரு சிற்றினமான N. khasianaவின் திறக்கப்படாத  கெண்டிகளை கைகளால் லேசாக அழுத்தினால் அவை வாயு நிரம்பி இருப்பதை உணரலாம். மேலும் அழுத்தினால் அவை வெடித்து, பெரிஸ்டோம் லிட் (peristome lid) எனப்படும் மூடிப்பகுதிகள் திறக்கப்படும். இதுபோன்ற கள கவனிப்புகளின் விளைவாக, திறக்கப்படாத நெபாந்தஸ் கெண்டிகளில் “ஏதோ சில” வாயுகள் இருக்கின்றன என நாங்கள் ஊகித்தோம். இந்த கவனிப்பு எங்களை இந்த வாயுக்களின் கூட்டமைப்பை “வாயு நிரலியல்” (gas chromatography) எனும் ஆய்விற்குட்படுத்த தூண்டியது. இவ்வாய்வு அவற்றில் அதிக அளவில் கரியமிலவாயு இருப்பதையும் உறுதி செய்தது”, என விவரிக்கின்றார் முனைவர் பேபி.

மேலும் இவ்வாய்வாளர்கள் திறக்கப்படாத கெண்டிகளின் கார அமிலத்தன்மை (pH) சுமார் 3.5 ஆக இருப்பதை கவனித்துள்ளனர். இந்த அமிலத்தன்மை இரை பிடிபட்டப்பின்னர் மேலும் அதிகரித்து உள்ளே உள்ள திரவம் மஞ்சள் நிறத்திலிருந்து நிறமற்ற நிலைக்கு மாற்றமடைகிறது. இந்த அதீத அமிலத்தன்மையானது அதில் கரைந்திருந்த கரியமிலவாயுவாலேயே என்பதை இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. சரி, எங்கிருந்து இந்த கரியமிலவாயு கெண்டிக்குள் வந்தது? நுண்ணோக்கிக்கள் மூலம் தளிரிழைகளையும் வேர்களையும் கண்டபோது, அவற்றுள் பல உட்குழி கால்வாய் போன்ற அமைப்புகளும் (hollow channels) குழாய் கட்டுக்களும் (vascular bundles) இருப்பதை கண்டு படம்பிடித்துள்ளனர். ஆனால் இந்த குழாய்கள் மூலம் நிலத்திலிருந்து கரியமிலவாயு வேர்கள் வழியாக கெண்டிகளுக்கு வர வாய்பில்லை எனவும் கெண்டிகளிலுள்ள அதீத கரியமிலவாயு அவற்றிலுள்ள தனித்துவமான சில திசுக்களின் கூடுதல் ஆவியுயிர்ப்பின் விளைவாகவே அங்கே நிரம்பியது எனவும் இந்த ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது.

கரியமிலவாயு மேலும் எவ்வாறு இரையை பிடிக்க உதவுகிறது என்பதை அவர்கள் விவரிக்கின்றனர்.

“கரியமிலவாயு ஒரு அறியப்பட்ட பூச்சி ஈர்ப்பி. பல வகை பூச்சிகள் தாவரங்களிலிருந்து வெளியேறும் கரியமிலவாயுவின் சிறு மாறுதல்கள் மற்றும் மாறல் விகிதத்தைக்கூட கூர்ந்து கவனிக்கக்கூடியவை. பூச்சிகள் கரியமிலவாயுவை கண்டறியவும் கணிக்கவும் ஏதுவாக அவற்றுள் பல வளர்ச்சியடைந்த ஏற்பிகளை கொண்டுள்ளன. இது அவைகளின் இரைகளை கண்டறிய உதவும் ஒரு காரணியாகும். எங்கள் ஆய்வில் N. khasiana கரியமிலவாயுடை சீறாக வெளியேற்றுவதையும், அது பின்னர் ஒரு புலன்சார்ந்த குறிப்பாக அமைந்தது இரையை ஈர்பதையும் கண்டறிந்துள்ளோம்” என்கிறார் முனைவர் பேபி.

இந்த ஆய்வு நெபாந்தஸ் மற்றும் பிற புலாலுன்ணித் தாவரங்களில் அறியப்படாத சில சுவாரசியமான கேள்விகளுக்கு பதிலளித்திருப்பதோடு மேலும் ஆராய பல பாதைகளை அமைத்துமுள்ளது.

“நாங்கள் தற்போது  N.khasianaவில் உள்ள  தாவர வேதிப்பொருட்களை கண்டறிவது மற்றும் இத்தாவரங்களின் இதர இரைப்பிடிக்கும் முறைகளை ஆராய்வது போன்றவற்றில் ஆர்வமாக உள்ளோம்” என எதிர்காலத் திட்டங்களைப்பற்றி விவரித்தார் முனைவர் பேபி.

Tamil

Recent Stories

எழுத்தாளர்
முடக்கு  வாத நோய்க்கும் கோவிட்-19 தொற்றுக்கும் உள்ள ஒற்றுமைகள்

முடக்கு வாதம்  (Rheumatoid Arthritis) எனப்படும் நோயானது முதன்முதலில் 19ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டதாகும். இன்றளவில் உலகின் சுமார் 1-2% மக்களை இந்த நோய் தாக்குகின்றது.  ஓர் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை விடுத்து, அந்த உடலின் திசுக்களை, குறிப்பாக மூட்டுகளைத் தாக்கி, பாதிப்பு ஏற்படுத்துவதே இந்நோய்க்குக் காரணமாகும்.

எழுத்தாளர்
உரையாடலில் இருந்து உரையாடலாக மாற்றும் எந்திரவழி மொழிபெயர்பைப் பயன்படுத்தி இந்திய மொழிகளில் கல்விக்கான மொழியாக்கம்

IIT பம்பாய், IIT மெட்ராஸ் மற்றும் IIT ஐதராபாத் முதலிய கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ஆங்கிலத்திலிருந்து பல இந்திய மொழிகளுக்கு உரையாடலில் இருந்து உரையாடலாக மாற்றும் எந்திரவழி மொழிபெயர்ப்பு அமைப்பை (SSMT) உருவாக்கியுள்ளனர்

எழுத்தாளர்
யானைகளின் வாலில் உள்ள வாழ்வியல் ரகசியங்கள்

ஆய்வாளர்கள் யானைகளின் வாலின் மயிரிழைகளில் உள்ள இயக்குநீரினைக் கொண்டு அவற்றின் மனஅழுத்த நிலையைக்  கண்டறிந்துள்ளனர்.

எழுத்தாளர்
Lockeia gigantus trace fossils found from Fort Member. Credit: Authors

ಜೈ ನಾರಾಯಣ್ ವ್ಯಾಸ್ ವಿಶ್ವವಿದ್ಯಾಲಯದ ಸಂಶೋಧಕರು ಜೈಸಲ್ಮೇರ್ ನಗರದ ಬಳಿಯ ಜೈಸಲ್ಮೇರ್ ರಚನೆಯಲ್ಲಿ ಲಾಕಿಯಾ ಜೈಗ್ಯಾಂಟಸ್ ಪಳೆಯುಳಿಕೆಗಳನ್ನು ಕಂಡುಹಿಡಿದಿದ್ದಾರೆ. ಇದು ಭಾರತದಿಂದ ಇಂತಹ ಪಳೆಯುಳಿಕೆಗಳ ಮೊದಲ ದಾಖಲೆ ಮಾತ್ರವಲ್ಲ, ಇದುವರೆಗೆ ಪತ್ತೆಯಾದ ಅತಿದೊಡ್ಡ ಲಾಕಿಯಾ ಕುರುಹುಗಳು.

எழுத்தாளர்
ಇಂಡೋ-ಬರ್ಮೀಸ್ ಪ್ಯಾಂಗೊಲಿನ್ (ಮನಿಸ್ ಇಂಡೋಬರ್ಮಾನಿಕಾ). ಕೃಪೆ: ವಾಂಗ್ಮೋ, ಎಲ್.ಕೆ., ಘೋಷ್, ಎ., ಡೋಲ್ಕರ್, ಎಸ್. ಮತ್ತು ಇತರರು.

ಕಳ್ಳತನದಿಂದ ಸಾಗಾಟವಾಗುತ್ತಿದ್ದ ಹಲವು ಪ್ರಾಣಿಗಳ ನಡುವೆ ಪ್ಯಾಂಗೋಲಿನ್ ನ ಹೊಸ ಪ್ರಭೇದವನ್ನು ಪತ್ತೆ ಮಾಡಲಾಗಿದೆ.

எழுத்தாளர்
ಸ್ಪರ್ಶರಹಿತ ಬೆರಳಚ್ಚು ಸಂವೇದಕದ ಪ್ರಾತಿನಿಧಿಕ ಚಿತ್ರ

ಸಾಧಾರಣವಾಗಿ, ಫೋನ್ ಅನ್ನು ಅನ್ಲಾಕ್ ಮಾಡುವಾಗ ಅಥವಾ ಕಛೇರಿಯಲ್ಲಿ ಬಯೋಮೆಟ್ರಿಕ್ ಸ್ಕ್ಯಾನರುಗಳನ್ನು ಬಳಸುವಾಗ, ನಿಮ್ಮ ಬೆರಳನ್ನು ಸ್ಕ್ಯಾನರಿನ ಮೇಲ್ಮೈಗೆ ಒತ್ತ ಬೇಕಾಗುತ್ತದೆ. ಬೆರಳಚ್ಚುಗಳನ್ನು ಸೆರೆಹಿಡಿಯುವುದು ಹೀಗೆ. ಆದರೆ, ಹೊಸ ಸಂಶೋಧನೆಯೊಂದು ಈ ಪ್ರಕ್ರಿಯೆಯನ್ನು ಇನ್ನಷ್ಟು ಸ್ವಚ್ಛ, ಸುಲಭ ಮತ್ತು ಹೆಚ್ಚು ನಿಖರವಾಗಿಸುವ ವಿಧಾನವನ್ನು ರೂಪಿಸಿದೆ. ಸಾಧನವನ್ನು ಮುಟ್ಟದೆಯೇ ಬೆರಳಚ್ಚನ್ನು ಸಂಗ್ರಹಿಸುವ ಮಾರ್ಗವನ್ನು ಹುಡುಕಿದೆ.

எழுத்தாளர்
ಮೈಕ್ರೋಸಾಫ್ಟ್ ಡಿಸೈನರ್ ನ ಇಮೇಜ್ ಕ್ರಿಯೇಟರ್ ಬಳಸಿ ಚಿತ್ರ ರಚಿಸಲಾಗಿದೆ

ಐಐಟಿ ಬಾಂಬೆಯ ಸಂಶೋಧಕರು ಶಾಕ್‌ವೇವ್-ಆಧಾರಿತ ಸೂಜಿ-ಮುಕ್ತ ಸಿರಿಂಜ್ ಅನ್ನು ಅಭಿವೃದ್ಧಿಪಡಿಸಿದ್ದಾರೆ. ಈ ಮೂಲಕ ಸೂಜಿಗಳಿಲ್ಲದೆ ಔಷಧಿಗಳನ್ನು ಪೂರೈಸುವ ಮಾರ್ಗವನ್ನು ಕಂಡುಹಿಡಿದಿದ್ದಾರೆ.

எழுத்தாளர்
ಅತ್ಯಂತ ಪ್ರಾಚೀನ ವಸ್ತುವಿನ ಅಧ್ಯಯನ

ಹಯಾಬುಸಾ ಎಂದರೆ ವೇಗವಾಗಿ ಚಲಿಸುವ ಜಪಾನೀ ಬೈಕ್ ನೆನಪಿಗೆ ತಕ್ಷಣ ಬರುವುದು ಅಲ್ಲವೇ? ಆದರೆ ಜಪಾನಿನ ಬಾಹ್ಯಾಕಾಶ ಸಂಸ್ಥೆ - (ಜಾಕ್ಸ, JAXA) ತನ್ನ ಒಂದು ನೌಕೆಯ ಹೆಸರು ಹಯಾಬುಸಾ 2 ಎಂದು ಇಟ್ಟಿದ್ದಾರೆ. ಈ ನೌಕೆಯನ್ನು ಜಪಾನಿನ ಬಾಹ್ಯಾಕಾಶ ಸಂಸ್ಥೆ ಸೌರವ್ಯೂಹದಾದ್ಯಂತ ಸಂಚರಿಸಿ ರುಯ್ಗು (Ryugu) ಕ್ಷುದ್ರಗ್ರಹವನ್ನು ಸಂಪರ್ಕ ಸಾಧಿಸುವ ಉದ್ದೇಶದಿಂದ  ಡಿಸೆಂಬರ್ 2014 ರಲ್ಲಿ ಉಡಾವಣೆ ಮಾಡಿತ್ತು. ಇದು ಸುಮಾರು ಮೂವತ್ತು ಕೋಟಿ (300 ಮಿಲಿಯನ್) ಕಿಲೋಮೀಟರ್ ದೂರ ಪ್ರಯಾಣಿಸಿ 2018 ರಲ್ಲಿ ರುಯ್ಗು ಕ್ಷುದ್ರಗ್ರಹವನ್ನು ಸ್ಪರ್ಶಿಸಿತ್ತು. ಅಲ್ಲಿಯೇ ಕೆಲ ತಿಂಗಳು ಇದ್ದು ಮಾಹಿತಿ ಮತ್ತು ವಸ್ತು ಸಂಗ್ರಹಣೆ ಮಾಡಿ, 2020 ಯಲ್ಲಿ ಯಶಸ್ವಿಯಾಗಿ ಹಿಂತಿರುಗಿತ್ತು.

எழுத்தாளர்
ಕಾಂಕ್ರೀಟ್‌ ಪರೀಕ್ಷೆಗೆ ಪ್ರೋಬ್‌

ಕಾಂಕ್ರೀಟ್‌ನಲ್ಲಿ ಹುದುಗಿರುವ ರೆಬಾರ್‌ಗಳಲ್ಲಿನ ತುಕ್ಕು ಪ್ರಮಾಣವನ್ನು ಮಾಪಿಸಲು ವಿಜ್ಞಾನಿಗಳು ಒಂದು ಹೊಸ ತಪಾಸಕವನ್ನು ಅಭಿವೃದ್ಧಿಪಡಿಸಿದ್ದಾರೆ.

எழுத்தாளர்
‘ದ್ವಿಪಾತ್ರ’ದಲ್ಲಿ ಮೈಕ್ರೋ ಆರ್‌ಎನ್‌ಎ

ವೈರಲ್ ಸೋಂಕುಗಳು ಮತ್ತು ಸ್ವಯಂ ನಿರೋಧಕ ಕಾಯಿಲೆಗಳಲ್ಲಿ ಮೈಕ್ರೋ ಆರ್‌ಎನ್‌ಎ ‘ದ್ವಿಪಾತ್ರ’ದಲ್ಲಿ ಕೆಲಸ ಮಾಡುತ್ತದೆ. 

எழுத்தாளர்
ರೀಚಾರ್ಜ್ ಮಾಡಬಹುದಾದ ಬ್ಯಾಟರಿಗಳು

ಐಐಟಿ ಬಾಂಬೆ ಯ ಬ್ಯಾಟರಿ ಪ್ರೋಟೋಟೈಪಿಂಗ್ ಲ್ಯಾಬ್ ನ ಸಂಶೋಧಕರು ಇಂಧನ (ಶಕ್ತಿ) ಶೇಖರಣಾ ಸಾಧನವಾಗಿರುವ ರೀಚಾರ್ಜ್ ಮಾಡಬಹುದಾದ ಬ್ಯಾಟರಿಗಳ ಬಗ್ಗೆ ಅಧ್ಯಯನ ನಡೆಸುತ್ತಿದ್ದಾರೆ. 

Loading content ...
Loading content ...
Loading content ...
Loading content ...
Loading content ...