பெங்களூரு
மிக்ரிலெட்டா ஐஷானி – கார்காலத்தில் கண்ணாமூச்சியாடும் வடகிழக்கிந்தியாவின் புதுத்தவளை இனம்!

“அவல்தொறும் தேரை தெவிட்ட, மிசைதொறும்
வெங்குரல் புள்ளினம் ஒலிப்ப, உதுக்காண்,
கார் தொடங்கின்றால் காலை..”
453

குளங்கள் மற்றும் நீர் நிலைகளில் தவளைகளின் கரவோசையுடன் துவங்கியது கார்காலம் என்கிறது பேயனார் எழுதிய ஐங்குறுநூற்றுப் பாடல் ஒன்று.    தற்போதும் அதே அறிகுறிகளுடன் நாம் அடைமழை பொழியும் கார்காலத்தில் அடியெடுத்து வைத்துவிட்டோம். கொட்டித்தீர்க்கும் பருவமழையின் ஓசையோடு தவளைகளின் கரகரக்கும் கரைவொலியும் இணைந்து ஒலிக்கும் இந்த பருவமழைக்காலமானது பல தவளைகளுக்கு இனப்பெருக்கக் காலமாகவும் விளங்குகிறது.    ஆனால் அசாம் மாநிலத்தில் சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ள தவளை இனமான மிக்ரிலெட்டா ஐஷானியிற்கு இந்த விதி பொருந்தாது.  பருவமழைக்காலத்தில் இனவிருத்தியில் ஈடுபடும் பிற தவளை இனங்களைப் போலில்லாமல், இந்த ஏய்ப்புத்தன்மைக் கொண்ட தவளை இனமானது பருவமழைக்காலத்தின் துவக்கத்திற்கு முன்னதே இனப்பெருக்கத்தில் ஈடுபட்டுவிட்டு பின்னர் ஆண்டுமுழுவதும் ஒளிந்து வாழக்கூடியவையாகும்.

ஆறு ஆண்டுகளாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட தீவிர  கள ஆய்வுப்பணிகளின் விளைவாக  தில்லி பல்கலைக்கழகம், இந்திய வனவுயிர் நிறுவனம் (Wildlife Institute of India), இந்தோநேசியாவின் அறிவியல் நிறுவனம் (Indonesian Institute of Sciences) மற்றும் அமெரிக்காவின் டெக்ஸஸ் பல்கலைக்கழகங்களைச் (University of Texas) சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த தவளை இனத்தை கண்டறிந்துள்ளனர். இவர்கள் இத்தவளையை முதன்முதலில் அசாமின் காச்சார் என்னும் மாவட்டத்தில்;  மனித குடியிருப்புக்களுக்கு அருகிலும், மனித நடவடிக்கைகளால் பெரிதும் பாதிக்கப்பட்ட வனப்பகுதிகளிலும் கண்டறிந்துள்ளனர். மேலும்    திரிபுரா மற்றும் மணிப்பூர் மாநிலங்களிலும் இவற்றை கண்டுள்ளனர்.

“மனித குடியிருப்புகளுக்கு மிக அருகில் காணப்படும் சராசரியான தவளை இனங்கள் கூட இன்னும் சரியாக ஆவணப்படுத்தவில்லை என்பதை எங்கள் கண்டுபிடிப்பு உணர்த்துகிறது. மேலும் மனித செயல்பாடுகளின் விளைவாக அழிவின் விளிம்பிலிருக்கும் வடகிழக்கிந்திய தவளை இனங்களை  இனம் காணவும் அறிவியல் ரீதியில் ஆவணப்படுத்தவும் இன்னும் தீவிர களப்பணிகள் அவசியமாகிறது” என்கிறார் இந்திய வனவுயிர் நிறுவனத்தை சேர்ந்த இவ்வாய்வின் முதன்மை ஆசிரியரான முனைவர் அபிஜித் தாஸ். பீர்ஜெ (PeerJ) எனும் ஆய்விதழில் வெளியான இவ்வாய்வு இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை (Department of Science and Technology (DST), அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம் (Science and Engineering Research Board (SERB)) மற்றும் அறிவியல் மற்றும் தொழில்சார் ஆய்வு மன்றம் (Council for Scientific and Industrial Research (CSIR)) ஆகியவற்றின் நிதி நல்கையுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளதால் மிக்ரிலெட்டா ஐஷானி யானது “வடகிழக்கு” என பொருள் கொள்ளும் சமஸ்கிருத சொல்லான “ஐஷானி”யைத் தழுவி பெயரிடப்பட்டுள்ளது. “வடகிழக்கிந்தியாவின் நெல் தவளை” (Northeast Indian paddy frog) எனும் வட்டாரப்பொதுப் பெயரினை இத்தவளைக்கு ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த தவளைச் சிற்றினமானது தென் கிழக்காசியா முழுதும் பரவலாக காணப்படும் வாய்-குருகிய நெல் தவளைகளை உள்ளடக்கிய பேரினமான மிக்ரிலெட்டாவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புது தவளை சிற்றினம் செம்பழுப்பு நிறத்துடனும் 2.2-2.8 செண்டிமீட்டர் அகலத்துடனும் அமையப்பெற்றுள்ளதோடு, பக்கவாட்டில் பிரதானமாக கருப்பு இழைவரிகளையும் சாம்பல் நிற புள்ளியமைவுகளையும் கொண்டுள்ளன. மேலும் இவை பருவமழைக்காலம் துவங்குவதற்கு முன்னர் மட்டுமே வெளியில் இயங்கும் தன்மை கொண்டது.

“கடந்த ஆறு ஆண்டுகளில் வடகிழக்கில் எங்களுக்கு இருக்கும் அனுபவத்தில், எங்களால் இந்த தவளைகளை பருவமழைக்காலங்களில் எங்கும் காணமுடிந்ததில்லை” என்கிறார் தில்லி பல்கலைக்கழகத்தை சார்ந்த இவ்வாய்வின் மற்றொரு ஆசிரியரான முனைவர் எஸ்.டி. பிஜு.

இந்த தவளையின் நடத்தை பண்புகள் மற்றும் சூழலியல் தன்மைகள் பற்றிய தகவல்கள் இன்னும் அறியப்படாமலேயே உள்ளது. ஆனால் ஆய்வாளர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக இவற்றை கண்டறிந்துகொண்டு வருகின்றனர்.

“இவற்றின் இனப்பெருக்கக்காலமானது மே மாதத்தின் இறுதியில் மட்டும் அதாவது ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே நீடிக்கின்றது. இதனால் இவற்றின் நடத்தைப்பண்புகள் பற்றிய தகவல்களை அறிவது அரிதாகின்றது. ஆனால் தற்போதைய ஆய்வின் விளைவால் இத்தவளைகள் மிகவும் குறைவான காலத்திற்கு மட்டும் வெளியில் வந்து கரைவொலி எழுப்பி, இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு உடனே மறைந்து போகும் தன்மையுள்ள மிக விரைவான இனவிருத்தியாளர்கள் என்பதை நம்மால் அறிய முடிகின்றது”. என்கிறார் முனைவர் பிஜு. இந்த தவளைகள் வருடத்தின் மற்ற எந்த பருவத்திலும் வெளியில் காணப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.     

மிக்ரிலெட்டா ஐஷானியின் தாயனை (DNA) மாதிரிகளை தென் கிழக்கு மற்றும் கிழக்காசியாவில் அறியப்பட்டுள்ள நான்கு மிக்ரிலெட்டா  பேரினத்தைச் சேர்ந்த தவளைகளின் மாதிரிகளுடன் ஆய்வாளர்கள் ஒப்பிட்டு பார்க்கையில் இந்த  புதுத் தவளை மாதிரிகளின் தாயனை பண்புகள் மற்றும் இயற்பியல் பண்புகள் இதர மாதிரிகளிலிருந்து வேறுபட்டிருப்பதால் இவற்றை  ஒரு புது சிற்றினமாக வகைப்படுத்தியுள்ளனர்.  மேலும் இது போல் இன்னும் அறியப்படாத சிற்றினங்கள் தென் கிழக்காசிய நாடுகளான லாஓசு, கம்போடியா, தாய்லாந்து மற்றும் வியட்நாமில் இருக்கக்கூடும் எனவும்  தாயனை ஆய்வு முடிவுகள் அறிவுறுத்துகின்றன.

“இன்னும் இரு ஆண்டுகளில் பிரதானமாக தென் கிழக்காசிய பகுதிகளில் மட்டுமே 4 முதல் 5 சிற்றினங்களாவது இந்த பேரினத்தின் கீழ் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்படும் வாய்ப்புள்ளது” என்று உறுதியுடன் கூறுகிறார் முனைவர் பிஜு. சமீபத்தில் சுமத்திரா தீவுகளில் 125 ஆண்டுகளிற்குப்பின் மிக்ரிலெட்டா இனோர்னாடா எனும் வேறொரு சிற்றினத்தை மறுமுறை கண்டறிந்த ஆய்வுக்குழுவில் முனைவர் பிஜுவும் இணைந்திருந்தமையால் இவர் மேற்க்கூறிய கருத்தை உறுதியாக முன் வைக்கின்றார்.

இது போல பல புதுத்தவளை இனங்கள் உலகம் மற்றும் நாடெங்கும் கண்டறியப்பட்டு வருவதின் விளைவாக பழைமையான இவ்விலங்குகளின்  உயிர்புவியியல் மற்றும் பரிணாம ரீதியில் புதிர்களாக விளங்கிய  பல விடையரியா வினாக்களுக்குத் தற்போது விடைக்காண முடிகிறது.

Tamil

Recent Stories

எழுத்தாளர்
முடக்கு  வாத நோய்க்கும் கோவிட்-19 தொற்றுக்கும் உள்ள ஒற்றுமைகள்

முடக்கு வாதம்  (Rheumatoid Arthritis) எனப்படும் நோயானது முதன்முதலில் 19ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டதாகும். இன்றளவில் உலகின் சுமார் 1-2% மக்களை இந்த நோய் தாக்குகின்றது.  ஓர் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை விடுத்து, அந்த உடலின் திசுக்களை, குறிப்பாக மூட்டுகளைத் தாக்கி, பாதிப்பு ஏற்படுத்துவதே இந்நோய்க்குக் காரணமாகும்.

எழுத்தாளர்
உரையாடலில் இருந்து உரையாடலாக மாற்றும் எந்திரவழி மொழிபெயர்பைப் பயன்படுத்தி இந்திய மொழிகளில் கல்விக்கான மொழியாக்கம்

IIT பம்பாய், IIT மெட்ராஸ் மற்றும் IIT ஐதராபாத் முதலிய கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ஆங்கிலத்திலிருந்து பல இந்திய மொழிகளுக்கு உரையாடலில் இருந்து உரையாடலாக மாற்றும் எந்திரவழி மொழிபெயர்ப்பு அமைப்பை (SSMT) உருவாக்கியுள்ளனர்

எழுத்தாளர்
யானைகளின் வாலில் உள்ள வாழ்வியல் ரகசியங்கள்

ஆய்வாளர்கள் யானைகளின் வாலின் மயிரிழைகளில் உள்ள இயக்குநீரினைக் கொண்டு அவற்றின் மனஅழுத்த நிலையைக்  கண்டறிந்துள்ளனர்.

எழுத்தாளர்
Lockeia gigantus trace fossils found from Fort Member. Credit: Authors

ಜೈ ನಾರಾಯಣ್ ವ್ಯಾಸ್ ವಿಶ್ವವಿದ್ಯಾಲಯದ ಸಂಶೋಧಕರು ಜೈಸಲ್ಮೇರ್ ನಗರದ ಬಳಿಯ ಜೈಸಲ್ಮೇರ್ ರಚನೆಯಲ್ಲಿ ಲಾಕಿಯಾ ಜೈಗ್ಯಾಂಟಸ್ ಪಳೆಯುಳಿಕೆಗಳನ್ನು ಕಂಡುಹಿಡಿದಿದ್ದಾರೆ. ಇದು ಭಾರತದಿಂದ ಇಂತಹ ಪಳೆಯುಳಿಕೆಗಳ ಮೊದಲ ದಾಖಲೆ ಮಾತ್ರವಲ್ಲ, ಇದುವರೆಗೆ ಪತ್ತೆಯಾದ ಅತಿದೊಡ್ಡ ಲಾಕಿಯಾ ಕುರುಹುಗಳು.

எழுத்தாளர்
ಇಂಡೋ-ಬರ್ಮೀಸ್ ಪ್ಯಾಂಗೊಲಿನ್ (ಮನಿಸ್ ಇಂಡೋಬರ್ಮಾನಿಕಾ). ಕೃಪೆ: ವಾಂಗ್ಮೋ, ಎಲ್.ಕೆ., ಘೋಷ್, ಎ., ಡೋಲ್ಕರ್, ಎಸ್. ಮತ್ತು ಇತರರು.

ಕಳ್ಳತನದಿಂದ ಸಾಗಾಟವಾಗುತ್ತಿದ್ದ ಹಲವು ಪ್ರಾಣಿಗಳ ನಡುವೆ ಪ್ಯಾಂಗೋಲಿನ್ ನ ಹೊಸ ಪ್ರಭೇದವನ್ನು ಪತ್ತೆ ಮಾಡಲಾಗಿದೆ.

எழுத்தாளர்
ಸ್ಪರ್ಶರಹಿತ ಬೆರಳಚ್ಚು ಸಂವೇದಕದ ಪ್ರಾತಿನಿಧಿಕ ಚಿತ್ರ

ಸಾಧಾರಣವಾಗಿ, ಫೋನ್ ಅನ್ನು ಅನ್ಲಾಕ್ ಮಾಡುವಾಗ ಅಥವಾ ಕಛೇರಿಯಲ್ಲಿ ಬಯೋಮೆಟ್ರಿಕ್ ಸ್ಕ್ಯಾನರುಗಳನ್ನು ಬಳಸುವಾಗ, ನಿಮ್ಮ ಬೆರಳನ್ನು ಸ್ಕ್ಯಾನರಿನ ಮೇಲ್ಮೈಗೆ ಒತ್ತ ಬೇಕಾಗುತ್ತದೆ. ಬೆರಳಚ್ಚುಗಳನ್ನು ಸೆರೆಹಿಡಿಯುವುದು ಹೀಗೆ. ಆದರೆ, ಹೊಸ ಸಂಶೋಧನೆಯೊಂದು ಈ ಪ್ರಕ್ರಿಯೆಯನ್ನು ಇನ್ನಷ್ಟು ಸ್ವಚ್ಛ, ಸುಲಭ ಮತ್ತು ಹೆಚ್ಚು ನಿಖರವಾಗಿಸುವ ವಿಧಾನವನ್ನು ರೂಪಿಸಿದೆ. ಸಾಧನವನ್ನು ಮುಟ್ಟದೆಯೇ ಬೆರಳಚ್ಚನ್ನು ಸಂಗ್ರಹಿಸುವ ಮಾರ್ಗವನ್ನು ಹುಡುಕಿದೆ.

எழுத்தாளர்
ಮೈಕ್ರೋಸಾಫ್ಟ್ ಡಿಸೈನರ್ ನ ಇಮೇಜ್ ಕ್ರಿಯೇಟರ್ ಬಳಸಿ ಚಿತ್ರ ರಚಿಸಲಾಗಿದೆ

ಐಐಟಿ ಬಾಂಬೆಯ ಸಂಶೋಧಕರು ಶಾಕ್‌ವೇವ್-ಆಧಾರಿತ ಸೂಜಿ-ಮುಕ್ತ ಸಿರಿಂಜ್ ಅನ್ನು ಅಭಿವೃದ್ಧಿಪಡಿಸಿದ್ದಾರೆ. ಈ ಮೂಲಕ ಸೂಜಿಗಳಿಲ್ಲದೆ ಔಷಧಿಗಳನ್ನು ಪೂರೈಸುವ ಮಾರ್ಗವನ್ನು ಕಂಡುಹಿಡಿದಿದ್ದಾರೆ.

எழுத்தாளர்
ಅತ್ಯಂತ ಪ್ರಾಚೀನ ವಸ್ತುವಿನ ಅಧ್ಯಯನ

ಹಯಾಬುಸಾ ಎಂದರೆ ವೇಗವಾಗಿ ಚಲಿಸುವ ಜಪಾನೀ ಬೈಕ್ ನೆನಪಿಗೆ ತಕ್ಷಣ ಬರುವುದು ಅಲ್ಲವೇ? ಆದರೆ ಜಪಾನಿನ ಬಾಹ್ಯಾಕಾಶ ಸಂಸ್ಥೆ - (ಜಾಕ್ಸ, JAXA) ತನ್ನ ಒಂದು ನೌಕೆಯ ಹೆಸರು ಹಯಾಬುಸಾ 2 ಎಂದು ಇಟ್ಟಿದ್ದಾರೆ. ಈ ನೌಕೆಯನ್ನು ಜಪಾನಿನ ಬಾಹ್ಯಾಕಾಶ ಸಂಸ್ಥೆ ಸೌರವ್ಯೂಹದಾದ್ಯಂತ ಸಂಚರಿಸಿ ರುಯ್ಗು (Ryugu) ಕ್ಷುದ್ರಗ್ರಹವನ್ನು ಸಂಪರ್ಕ ಸಾಧಿಸುವ ಉದ್ದೇಶದಿಂದ  ಡಿಸೆಂಬರ್ 2014 ರಲ್ಲಿ ಉಡಾವಣೆ ಮಾಡಿತ್ತು. ಇದು ಸುಮಾರು ಮೂವತ್ತು ಕೋಟಿ (300 ಮಿಲಿಯನ್) ಕಿಲೋಮೀಟರ್ ದೂರ ಪ್ರಯಾಣಿಸಿ 2018 ರಲ್ಲಿ ರುಯ್ಗು ಕ್ಷುದ್ರಗ್ರಹವನ್ನು ಸ್ಪರ್ಶಿಸಿತ್ತು. ಅಲ್ಲಿಯೇ ಕೆಲ ತಿಂಗಳು ಇದ್ದು ಮಾಹಿತಿ ಮತ್ತು ವಸ್ತು ಸಂಗ್ರಹಣೆ ಮಾಡಿ, 2020 ಯಲ್ಲಿ ಯಶಸ್ವಿಯಾಗಿ ಹಿಂತಿರುಗಿತ್ತು.

எழுத்தாளர்
ಕಾಂಕ್ರೀಟ್‌ ಪರೀಕ್ಷೆಗೆ ಪ್ರೋಬ್‌

ಕಾಂಕ್ರೀಟ್‌ನಲ್ಲಿ ಹುದುಗಿರುವ ರೆಬಾರ್‌ಗಳಲ್ಲಿನ ತುಕ್ಕು ಪ್ರಮಾಣವನ್ನು ಮಾಪಿಸಲು ವಿಜ್ಞಾನಿಗಳು ಒಂದು ಹೊಸ ತಪಾಸಕವನ್ನು ಅಭಿವೃದ್ಧಿಪಡಿಸಿದ್ದಾರೆ.

எழுத்தாளர்
‘ದ್ವಿಪಾತ್ರ’ದಲ್ಲಿ ಮೈಕ್ರೋ ಆರ್‌ಎನ್‌ಎ

ವೈರಲ್ ಸೋಂಕುಗಳು ಮತ್ತು ಸ್ವಯಂ ನಿರೋಧಕ ಕಾಯಿಲೆಗಳಲ್ಲಿ ಮೈಕ್ರೋ ಆರ್‌ಎನ್‌ಎ ‘ದ್ವಿಪಾತ್ರ’ದಲ್ಲಿ ಕೆಲಸ ಮಾಡುತ್ತದೆ. 

எழுத்தாளர்
ರೀಚಾರ್ಜ್ ಮಾಡಬಹುದಾದ ಬ್ಯಾಟರಿಗಳು

ಐಐಟಿ ಬಾಂಬೆ ಯ ಬ್ಯಾಟರಿ ಪ್ರೋಟೋಟೈಪಿಂಗ್ ಲ್ಯಾಬ್ ನ ಸಂಶೋಧಕರು ಇಂಧನ (ಶಕ್ತಿ) ಶೇಖರಣಾ ಸಾಧನವಾಗಿರುವ ರೀಚಾರ್ಜ್ ಮಾಡಬಹುದಾದ ಬ್ಯಾಟರಿಗಳ ಬಗ್ಗೆ ಅಧ್ಯಯನ ನಡೆಸುತ್ತಿದ್ದಾರೆ. 

Loading content ...
Loading content ...
Loading content ...
Loading content ...
Loading content ...